Tuesday, January 10, 2012

ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

சரணங்கள்

1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? --- ஆர்

2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? --- ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? --- ஆர்

அனுக்ரக வார்த்தையோடே

1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.

2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

ஆத்துமமே , என் முழு உள்ளமே

ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
சரணங்கள்

1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள --- ஆத்துமமே

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத --- ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் , மேலான --- ஆத்துமமே

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த --- ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் --- ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே --- ஆத்துமமே

அருள் ஏராளமாய்ப் பெய்யும்

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

பல்லவி

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் --- அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் --- அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே --- அருள்